May 22, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

இரண்டு வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வெளிநாட்டு பிரஜை கைது செய்யப்பட்டார்

Share:

அம்பாங், பாண்டன் இண்டா - வில் உள்ள ஓர் உணவகத்தில் இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து கடந்த மே 20 ஆம் தேதி பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக அம்பாங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அதே நாளன்று, 5 மணியளவில் சம்பந்தப்பட்ட உணவகத்தில் பாதிக்கப்பட்டவரின் குழந்தை விளையாடி கொண்டிருக்கும் வேளை, அப்பிரஜை இத்தகைய இழிவான செயலை புரிந்திருப்பது தெரிய வந்ததாக முகமது ஆசம் இன்று கூறினார்.

இதை தொடர்ந்து, 34 வயதுடைய சம்பந்தப்பட்ட உணவகத்தின் சமையல்காரரான அந்நிய பிரஜை கைது செய்யப்பட்டார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 14 (a) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் சந்தேகிக்கும் நபரை வருகின்ற மே 28 ஆம் தேதி வரையில் ஐந்து நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related News

இரண்டு வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக வெளிந... | Thisaigal News