15 வயது வளர்ப்பு மகளை கடந்த 3 ஆண்டுகாலமாக பாலியல் பலாத்காரம் புரிந்து வந்ததாக கூறப்படும் 30 வயது மதிக்கத்தக்க ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட ஆடவர் கடந்த 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து அம்பாங், ஜாலான் பண்டான் இண்டாவில் உள்ள ஒரு கடைவீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்டப் பெண் இச்சம்பவம் குறித்து போலீஸ் புகார் அளித்ததைத் தொடர்ந்து அந்நபர் நேற்று வியாழக்கிழமை இரவு 10.30 மணி அளவில் அம்பாங் தாமான் சாகாவில் கைது செய்யப்பட்டதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் முஹத் ஆசம் இஸ்மாயில் தெரிவித்தார்.








