மாணவர்கள் மத்தியில் நிகழ்ந்த பகடிவதை சம்பவம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ள மாணவன் ஒருவன் தாக்கப்படும் காட்சியைக் கொண்ட காணொளியைத் தொடர்ந்து இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கிளந்தான்,குவாலக க்ராய்யில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பகடிவதைக்கு ஆளானதாக நம்பப்படும் மாணவன் ஒருவனின் பெற்றோரிடமிருந்த போலீஸ் புகார் ஒன்று பெறப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் சுஹைசி முஹமாட் தெரிவித்துள்ளார். போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி வகுப்பறை ஒன்றில் ஒரு மாணவனை இரு மாணவர்கள் பகடிவதை செய்ததுடன் கண்மூடித்தனமாக தாக்கும் காட்சி கண்டறியப்பட்டுள்ளதாக சுஹைசி முஹமாட் குறிப்பிட்டுள்ளார்.








