Mar 17, 2026
Thisaigal NewsYouTube
எரிவாயு கலன்கள் லோரியில் மோதி இளைஞர் பலி
தற்போதைய செய்திகள்

எரிவாயு கலன்கள் லோரியில் மோதி இளைஞர் பலி

Share:

எரிவாயு கலன்களுடன் சென்று கொண்டிருந்த லோரியின் பின்புறம் கார் மோதியதில் அதன் ஓட்டுநர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி மரணமுற்றார். இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கோலாலம்பூர் Elite நெடுஞ்சாலையின் 34.5 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.

பெரோடுவா மைவி காரில் ​கொண்டிருந்த அந்த இளைஞர் வேகக்கட்டுப்பாட்டை இழந்த நிலையில் லோரியின் பின்புறத்தில் மோதியதாக கூறப்படுகிறது. லோரியின் அடியில் காருடன் சிக்​கிக்கொண்ட அந்த நபரின் உடலை ​மீட்பதற்கு ​தீயணைப்பு​, மீட்புப்படையினர் பிரத்தியேக சாதனங்களை பயன்படுத்தியதாக சிலாங்கூர் மாநில ​​தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் முக்தார் தெரிவித்தார்.

விசாரணைக்கு உதவும் பொருட்டு, அந்த இளைஞரின் சடல​ம் போ​லீஸ் துறையிடம் ஒப்படைக்கப்பட்டதாக அஹ்மாட் முக்லிஸ் குறிப்பிட்டார்.

Related News