Jul 27, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளையர்களின் திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

கொள்ளையர்களின் திருட்டு முயற்சி முறியடிக்கப்பட்டது

Share:

கூச்சிங், ஏப்ரல் 23-

கூச்சிங், பத்து காவா, தாமான் டெசா வீரா-வில் மூதாட்டி ஒருவரிடம் கொள்ளையடிக்க முயற்சித்த திருட்டு கும்பலின் செயல்பாடு பொதுமக்களின் துரித நடவடிக்கையினால் முறியடிக்கப்பட்டது.

நேற்று காலை 7.54 மணியளவில் 50 வயதுடைய மூதாட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் அவரின் கைப்பையை பறிக்க முயற்சித்ததாக தெரியவந்துள்ளது.

அச்சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட மூதாட்டி தனது கைப்பையை கொள்ளையர்கள் பறித்திடாமல் இருப்பதற்காக போராடியதாகவும் அவ்வழியே வந்த வாகனமோட்டி ஒருவர் அந்நபர்களை வழிமறைத்து அம்மூத்தாட்டியை காப்பாற்றியதாக படவான் காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் லிம் ஜாவ் ஷியோங் கூறினார்.

சந்தேகிக்கும் நபர்களில் ஒருவர் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட வேளையில் மற்றொருவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடியதாக லிம் ஜாவ் ஷியோங் மேலும் தகவலளித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 394 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்