மிகப்பெரிய அளவிலான போதைப்பொருளுடன் ஆஸ்திரேலியாவில் பிடிபட்ட 34 வயதுடைய மலேசியப் பிரஜை விவகாரத்தில் அந்நாட்டு போலீசாருடன் புக்கிட் அமான் ஒத்துழைப்பு நல்கி வருவதாக போதைப்பொருள் துடைத்தொழிப்பு பிரிவு இயக்குநர் கமாருடின் முஹமாட் டின் தெரிவித்தார்.
மெல்பர்னில் பிடிபட்ட நான்கு நபர்களில் அந்த மலேசியப் பிரஜையும் அடங்குவார். 622 கிலோ எடை கொண்ட மெதாம்ஃபினா வகையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தலில் மொத்தம் நான்கு பேர் பிடிபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.








