Aug 13, 2026
Thisaigal NewsYouTube
கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது
தற்போதைய செய்திகள்

கெடாவில் அதிரடி சோதனை: 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது

Share:

மூடா மற்றும் குபாங் பாசு மாவட்டங்களில் உள்ள ஆறு இடங்களில் நடத்திய அதிரடிச் சோதனையில், 34 சட்டவிரோத வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உணவகங்கள், கட்டுமானத் தளங்கள் உள்ளிட்ட இடங்களில் 72 பேரைச் சோதித்ததில், முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த மியான்மார், இந்தோனேசியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த 24 ஆண்கள், 8 பெண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 34 பேர் பிடிபட்டனர்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாதது மற்றும் காலாவதியான விசா போன்ற குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கெடா மாநில குடிநுழைவுத்துறை இயக்குநர் Mohd Ridzzuan Mohd Zain தெரிவித்தார். கைதான அனைவரும் மேல் விசாரணைக்காகப் பெலாந்திக் குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி