Sep 23, 2026
Thisaigal NewsYouTube
ராக்கி நாய் மரணம்: சட்ட நடவடிக்கை குறித்து உரிமையாளர் பரிசீலனை
தற்போதைய செய்திகள்

ராக்கி நாய் மரணம்: சட்ட நடவடிக்கை குறித்து உரிமையாளர் பரிசீலனை

Share:

கிள்ளானில் நடத்தப்பட்ட தெருநாய்ப் பிடிப்புச் சோதனையின் போது, 'ராக்கி' என்ற தனது வளர்ப்பு நாய் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அதன் உரிமையாளர் ரோகிணிதேவி பரிசீலித்து வருகிறார்.

கடந்த ஜூலை 29 அன்று நடந்த இச்சம்பவம் குறித்துப் பேசிய அவர், அண்டை வீட்டார் சிலர் ராக்கியை இழுத்துச் சென்று அடித்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமலாக்க அதிகாரிகள் சாதாரணக் கயிற்றைப் பயன்படுத்தாமல், இரும்பு கம்பி கொண்ட கேபிளைப் பயன்படுத்தியதாலேயே நாய் கழுத்து இறுக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறினார்.

இதற்கிடையில், நாய் உரிமம் இல்லாததைச் சாக்காக வைத்து விலங்குகளைத் துன்புறுத்தக் கூடாது என்றும், இச்சம்பவம் குறித்து போலீஸ் துறையும் கால்நடை மருத்துவச் சேவைகள் துறையும் உடனே விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் மலேசியப் பிராணிகள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

Related News

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

மோண்ட் கியாரா போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு - 40 மீட்டர் சாலை திறப்பு!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

நாடெங்கிலும் 25.77 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடத்தல் சிகரெட், மதுபானங்கள் பறிமுதல்!

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி -  டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

80 ஆயிரம் ரிங்கிட் செலவில் 40 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி - டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தகவல்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

போக்குவரத்து துறையில் மலேசியா – சீனா புதிய ஒப்பந்தம்: செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த திட்டம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

அரசு உதவி கிடைத்தால் ஏற்கத் தயார் - ஏர்ஆசியா நிதி நெருக்கடி குறித்து டோனி ஃபெர்னாண்டஸ் விளக்கம்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

55 மலேசியர்களின் குடும்பங்களை பிரதமர் நேரில் சந்திக்க வேண்டும்

ராக்கி நாய் மரணம்: சட்ட நடவடிக்கை குறித்து உரிமையாளர் பரி... | Thisaigal News