May 22, 2026
Thisaigal NewsYouTube
பகாங் மாநிலத்தில் கூடுதல் விடுமுறை வழங்கப்படாது
தற்போதைய செய்திகள்

பகாங் மாநிலத்தில் கூடுதல் விடுமுறை வழங்கப்படாது

Share:

வரும் மே 22 ஆம் தேதி விசாக தினம் கொண்டாட்டமும், ஹரி ஹோல் தின அனுசரிப்பும் ஒரே நாளில் வருவதால் பகாங் மாநிலத்தில் கூடுதல் விடுமுறை வழங்கப்படாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது.

இவ்விரு தினங்களுக்கும் ஒரே பொது விடுமுறை வழங்கப்படும். மறுநாள் மே 23 ஆம் தேதி கூடுதல் விடுமுறை வழங்கப்படாது என்று மாநில அரசு செயலாளர் டத்தோஸ்ரீ சுல்கிஃப்லி யாகோப் தெரிவித்துள்ளார்.

ஹரி ஹோல் என்பது பகாங் மாநிலத்தின் நான்காவது சுல்தான், சுல்தான் சர் அபு பக்கர் மறைவுக்கு பிறகு ஐந்தவாது சுல்தான், காலஞ்சென்ற சுல்தான் அஹ்மத் ஷா அல்-முஸ்தாயின் பில்லா மறைந்ததை நினைவுக்கூரும் நாளாகும். கடந்த 1974 ஆம் ஆண்டு முதல் மே 22 ஆம் தேதி மாநிலத்தில் பொது விடுமுறை அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Related News