Oct 17, 2026
Thisaigal NewsYouTube

மைகார்டில் ஒவ்வொரு மாதமும் 200 வெள்ளி உதவித்தொகை - அது போலியானத் தகவல் - நிதியமைச்சு எச்சரிக்கை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
மைகார்டில் ஒவ்வொரு மாதமும் 200 வெள்ளி உதவித்தொகை - அது போலியானத் தகவல் - நிதியமைச்சு எச்சரிக்கை

நவம்பர்- 10

2024 ஆம் ஆண்டில் ஒவ்வொரு மாதமும் MyKad இல் RM200 உதவி கிடைக்கும் என்று கூறிய இரண்டு TikTok கணக்குகள் பொய்யான தலவலைப் பகிர்ந்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

பொய்யான அந்த உதவி நிதியைப் பெற்றுத் தருவதாகக் கூறி @moh.khairul457, @muhammad.dato.amr ஆகிய அந்த இரு Tiktok கணக்குகள் பொதுமக்களிடம் இருந்து அவர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பெறப் பயன்படுத்தப்படுவதாக சோதனை செயப்பட்டதில் தெரிய வந்திருப்பதாக அமைச்சு கூறியது.

சமூக ஊடகங்களில் இவ்வாறான போலி செய்திகளால் ஏமாறாமல் பொது மக்கள் விழிப்புடன் இருக்கும்படி நிதியமைச்சு எச்சரித்துள்ளது.

தற்போது வரையில், @moh.khairul457 என்ற டிக்டோக் கணக்கில் 4.7 மில்லியன் பார்வையாளர்களும், @muhammad.dato.amr கணக்கில் 142,300 பார்வையாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →