சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கும், கடுமையான காயங்களுக்கு உள்ளாவோருக்கும் குற்றவாளிகளிடமிருந்து நஷ்டஈடு பெற்றுத் தரும் வகையில் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் புதிய திருத்தங்களை மேற்கொள்ள போக்குவரத்து அமைச்சு திட்டமிட்டுள்ளது. மக்களவையின் கேள்வி நேரத்தின் போது போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று இதனை அறிவித்தார்.
இதன் மூலம், அபராதம் மற்றும் சிறைத் தண்டனையோடு சேர்த்து, பாதிக்கப்பட்ட தரப்பிற்குப் பொருத்தமான இழப்பீட்டை வழங்க உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு வழங்கப்படும். மேலும், சட்டவிரோத சாலைப் பந்தயங்களை ஒடுக்க ஏற்கனவே புதிய சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விபத்து நடப்பதற்கு முன்பாகவே பந்தயத்தில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் அந்தோனி லோக் வலியுறுத்தினார்.








