Jul 14, 2026
Thisaigal NewsYouTube
பட்டர்வொர்த் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் ஆபத்தற்றவை – போலீஸ் உறுதி
தற்போதைய செய்திகள்

பட்டர்வொர்த் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பீரங்கி குண்டுகள் ஆபத்தற்றவை – போலீஸ் உறுதி

Share:

பட்டர்வொர்த், தாமான் பாகான் பகுதியில் உள்ள வீடு ஒன்றின், பொருட்கள் சேமிப்பு அறையில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு பயிற்சி சிறு பீரங்கி குண்டுகள் வெடிக்கும் தன்மையற்றவை என்றும், அதனால் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும் போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இது குறித்து செபராங் பிறை உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் அனுவார் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த டிசம்பரில் உயிரிழந்த தனது தந்தையின், வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அந்த இரண்டு பொருட்களையும் கண்டெடுத்ததாக பெண் ஒருவர், நேற்று பட்டர்வொர்த் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பொருட்களைக் கைப்பற்றி சோதனையிட்ட நிபுணர்கள் அவை வெடிக்கும் தன்மையற்றவை என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேவேளையில், அவை பீரங்கி குண்டுகள் என்றே தெரியாமல் அந்த குடும்பத்தினர், இத்தனை ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related News