Jul 14, 2026
Thisaigal NewsYouTube
பேராக்கில்  டிங்கி பாதிப்பு 25.4% அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

பேராக்கில் டிங்கி பாதிப்பு 25.4% அதிகரிப்பு

Share:

பேராக் மாநிலத்தில் டிங்கி காய்ச்சல் பாதிப்பு தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வரும் நிலையில், 2026ஆம் ஆண்டின் 26வது தொற்றியல் வாரத்தில் ஜூன் 28 முதல் ஜூலை 4 வரை புதிதாக 63 டிங்கி பதிவுகள் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், 2026ஆம் ஆண்டில் இதுவரை பதிவான டிங்கி நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 1,387 ஆக உயர்ந்துள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவான 1,106 ஒப்பிடுகையில் 281 பதிவுகள் அல்லது 25.4 விழுக்காடு அதிகரிப்பாகும் என்று பேரா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர். டத்தோ அ. சிஙநேசன் கூறினார்.

இந்த வாரத்தில் பதிவான மொத்த 29 சம்பவங்கள் கிந்தா மாவட்டத்தில் பதிவாகி, மாநிலத்திலேயே அதிக பாதிப்பு ஏற்பட்ட மாவட்டமாக உள்ளது.

அடுத்ததாக கம்பார் மாவட்டத்தில் 11 வழக்குகள், பாதாங் பாடாங் மாவட்டத்தில் 6 சம்பங்கள் , கோலா கங்சார் மாவட்டத்தில் 3 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இந்த ஆண்டில் இதுவரை டெங்கி காரணமாக ஒரே ஒரு உயிரிழப்பு மட்டுமே பதிவாகியுள்ளது என்று டத்தோ சிவநேசன் குறிப்பிட்டார்.

Related News