May 21, 2026
Thisaigal NewsYouTube
தம்பியைக் கொலை செய்த பதின்ம வயது அண்ணன்
தற்போதைய செய்திகள்

தம்பியைக் கொலை செய்த பதின்ம வயது அண்ணன்

Share:

தமது தம்பியைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு பதின்ம வயது அண்ணன், ஜோகூரில் உள்ள பெர்மாய் மருத்துவமனையில் தடுத்து வைக்கப்பட மலாக்கா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் மலாக்கா, கம்போங் புக்கிட் பியாத்துவில் உள்ள தங்கள் வீட்டில் 9 வயது தம்பியை அந்த 15 வயது அண்ணன் கொலை செய்ததாக ஏற்கெனவே மலாக்கா, ஆயேர் கெரோமஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

நீதிபதி ரட்சி அப்துல் ஹாமிட் கூறுகயில், குற்றஞ்சாட்டப்பட்டவர் skizofrenia நோயால் பாதிக்கப்பட்டுள்ளான் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை, அவருக்கு மருத்துவ சிகிச்சையும் கவனிப்பும் தேவை என்றார்.

மாஜிஸ்திரேட் முதலில் அவரை கண்காணிப்புக்காக மருத்துவமனைக்கு அனுப்ப உத்தரவிட்டார், ஆனால் டிசம்பர் 26 அன்று தொடர்ந்த வழக்கு நிர்வாகத்தின் போது, அவரை கண்காணிப்பதற்காக சுங்கை உடாங் சிறையில் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.

வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட முடியாது எனக் கூறிய ராட்ஸி, முறையான வல்லுநர்களின் உதவியை நீதிமன்றம் நாடும் என்றார்.

எனவே, மருத்துவமனையிலேயே அந்த பதின்ம வயது அண்ணன் தடுத்து வைக்கப்பட்டு சிகிச்சையோடு கண்காணிப்பும் தொடரும் என்றார் ராட்ஸி.

Related News