May 22, 2026
Thisaigal NewsYouTube
2.52 மில்லியன் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்
தற்போதைய செய்திகள்

2.52 மில்லியன் வாகனங்கள் பிரதான நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும்

Share:

வருகின்ற ஜூன் 17 ஆம் தேதி, திங்கட்கிழமை Haji பெருநாளை முன்னிட்டு, வடக்கு தெற்கு நெடுஞ்சாலை, Kuala Lumpur - Karak நெடுஞ்சாலை, கிழ‌க்கு கரையோர நெடுஞ்சாலை LPT1 மற்றும் LPT2 ஆகிய பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கை 2.52 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய நெடுஞ்சாலையின் ஆணையம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு கடந்த புதன்கிழமை முதல் வருகின்ற ஜூன் 19 ஆம் தேதி வரையில் சம்பந்தப்பட்ட சாலையில் எந்தவொரு கட்டுமான மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கு தடை விதித்திருப்பதாக அது ஓர் அறிக்கையில் இன்று வெளியிட்டிருந்தது.

மேலும், நெடுஞ்சாலைகளில் அதன் செயல்பாடு மற்றும் அனைத்து வசதிகளும் பயணிகளுக்கு சிறப்பாக மேற்கொண்டு வரப்படுகின்றன. குறிப்பாக, பயணிகள் ஓய்வெடுத்து செல்வதற்கு R & R வசதி, தற்காலிக கூடுதல் பாதை வசதிகள், கார் நிறுத்தம் வசதி ஆகிய சேவைகள் போக்குவரத்து பயணிகளுக்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாக மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி, பெட்ரோல் நிலையங்களில் போதுமான பெட்ரோல், டீசல் வசதி உட்பட அவ்விடத்தில் உள்ள கழிவறைகளில் நீர் விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்யும்படி அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலையை குறித்த உடனுக்குடன் தகவல் மற்றும் அதன் நிலைக் குறித்த அறிவிப்பை மலேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சமூக வலைத்தளங்களின் வாயிலாக கண்டறியலாம் என்று அது மேலும் கூறியுள்ளது.

Related News