May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டைப் புரிந்த வணிகர் கைது
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டைப் புரிந்த வணிகர் கைது

Share:

இம்மாதம் முற்பகுதியில் இன்ஸ்டாகிராம் செயலி வாயிலாக அறிமுகமான இளம் வணிகர் ஒருவர், இயங்கலை தொடர்பில் தம்மிடம் ஆபாச சேட்டைப் புரிந்ததாக பெண் ஒருவர் செய்து கொண்ட புகாரைத் தொடர்ந்து 27 வயதுடைய அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வங்சா மாஜு மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Content Creator- படைப்பாளியான அந்த இளைஞர், வீடியோ அழைப்பில் தன்னுடன் உரையாடிக்கொண்டு இருந்த போது திடீரென்று ஆபாசமாக நடந்து கொண்டதாக 24 வயதுடைய அந்தப் பெண், கடந்த மே 17 ஆம் தேதி போலீஸ் புகார் செய்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்ட.

அந்த நபர் குற்றவியல் சட்டம் 509 ஆவது பிரிவின் கீழ் நேற்று பிற்பகல் 2.25 மணியளவில் கைது செய்யப்பட்டு, விசாரணைக்குப் பின்னர் போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News