Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சமையல் எண்ணெய் விலை நிலைநிறுத்தம் !
தற்போதைய செய்திகள்

சமையல் எண்ணெய் விலை நிலைநிறுத்தம் !

Share:

நாளை நவம்பர் 8 தொடங்கி அடுத்த மாதம் 7 ஆம் தேதி வரை புட்டியில் அடைக்கப்பட்ட சமையல் எண்ணெயின் விலை நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு வாணிபம், வாழ்க்கைச் செலவின அமைச்சு தெரிவித்துள்ளது.

நியாயமற்ற விலை அதிகரிப்பால் மக்கள் அவதியுறக்கூடாது என்பதற்காக அவ்வாறான முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு விளக்கியது.
விலைக் கட்டுப்பாட்டு சட்டம் 2011இன்படியும் அரசாங்கத்தின் Payung Rahmah திட்டத்தின்படியும் சமையல் எண்ணெய்க்கான சில்லறை விலையை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

ஒரு கிலோ சமையல் எண்ணெய் 6 வெள்ளி 90 காசாகவும்
2 கிலோ சமையல் எண்ணெய் 13 வெள்ளி 30 காசாகவும்
3 கிலோ சமையல் எண்ணெய் 19 வெள்ளி 60 காசாகவும்
5 கிலோ சமையல் எண்ணெய் 30 வெள்ளி 90 காசாகவும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட அதிகமாக விற்பனை செய்யும் தரப்பு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைச்சின் கண்காணிப்பு நடவடிக்கை இருந்தாலும் வரம்பு மீறிய விலையில் விற்கும் தரப்பினர் குறித்து பொது மக்களும் புகார் அளிக்கலாம் என அவ்வமைச்சு மேலும் கூறியது.

Related News