மலேசிய நாட்டின் மன்னரையும் மாநில சுல்தான்களையும் மன்னர் ஆட்சியையும் ஜசெக கட்சி எப்பொழுது போற்றியே வருகின்றது என ஜசெக கட்சியின் பொது செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் விளக்கமளித்துள்ளார்.
ஜசெக கட்சியின் கொள்கைகளில் ஒன்று, மாநில அரசு தருகின்ற எந்த வொரு மரியாதைக்குரிய கௌரவப் பட்டங்களையும் கட்சி உறுப்பினர்கள் ஏற்க கூடாது என்பதாகும். அதே சமயம், கட்சியிலிருந்து ஓய்வு பெறவிருக்கும் கட்சி உறுப்பினர்கள் கௌரவ பட்டம் ஏற்கும் விலக்கல் உண்டும். ஆகையால், கட்சியின் கொள்கையை கடைபிடித்து வரும் வழக்கம், அரசர்களை அவமதிக்கும் செயல் அல்ல என்றும் அதனை ஒரு பிரச்சனையாக உருமாற்றம் செய்ய வேண்டாம் என்று அந்தோணி லோக் கேட்டுக் கொண்டார்.








