நாட்டில் 1.25 கோடிக்கும் அதிகமான மக்கள் 100 ரிங்கிட் 'சாரா' நிதியுதவித் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். இத்திட்டம் தொடங்கப்பட்ட வெறும் மூன்றே வாரங்களில், 100 கோடி ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி மக்களுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அடிப்படைத் தேவைகளை மக்கள் பூர்த்தி செய்துகொள்ள உதவும் வகையில் இந்த நிதி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரச் சூழலில் குறைந்த வருமானம் பெறும் பிரிவினரான B40 மற்றும் M40 மக்களுக்கு இந்த உதவி பெரும் பக்கபலமாக இருப்பதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தகுதியுள்ள அனைவருக்கும் இந்த உதவி முறையாகச் சென்றடைவதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் இன்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த நேரடி நிதியுதவி நடவடிக்கை, பயடீட்டாளர்களின் வாங்கும் சக்தியை அதிகரிப்பதோடு உள்ளூர் பொருளாதாரச் சந்தையையும் ஊக்கப்படுத்தும் என்று பிரதமர் மேலும் கூறினார்.








