Aug 28, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி
அரசியல்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

Share:

கோத்தா பாரு, ஜூன்.21-

பெர்சாமா கட்சியானது வரும் வெள்ளிக்கிழமை ஜோகூர் பாருவில் நடைபெறும் நிகழ்வில், ஜோகூர் மாநிலத் தேர்தலுக்கான தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவுள்ளது.

இது குறித்து கட்சித் தலைவர் டத்தோ ஶ்ரீ ரஃபிஸி ரம்லி வெளியிட்டுள்ள தகவலில் வேட்பாளர்களுக்கான தேர்வு முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கட்சி எத்தனை தொகுதிகளில் போட்டியிடவுள்ளது என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.

மேலும், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் போட்டியிட விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில், இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News