Aug 28, 2026
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு
அரசியல்

மலாய்க்காரர்களை ஒன்றிணைக்கும் புதிய அரசியல் கட்சிகளுக்கு ஸாஹிட் வரவேற்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.14-

மலாக்காரர்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படும் எந்த ஒரு புதிய மலாய் அரசியல் கட்சியையும் வரவேற்பதாக பாரிசான் நேஷனல் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.

ஜோகூர் பண்டார் டத்தோ ஓன் பகுதியில் உள்ள சுல்தான் இஸ்கண்டார் மசூதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸாஹிட், தனிநபர்கள் அல்லது முக்கிய அரசியல் தலைவர்களை உருவாக்கும் புதிய அரசியல் கட்சிகள், மலாய்க்காரர்களை மேலும் பிளவுபடுத்தாமல், அவர்களின் சிந்தனைகளையும் பொதுவான இலக்குகளையும் ஒன்றிணைக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளையில், மலாய்க்காரர்களின் ஒற்றுமையையும், அவர்களின் நலனையும் வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்றும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், நேற்று Reset இயக்கத்தின் நிறுவனர் ஹம்ஸா ஸைனுடின் புதிய அரசியல் கட்சியான பார்ட்டி வாவாசான் நெகாரா உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News