Aug 28, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்
அரசியல்

ஜோகூர் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட கெராக்கான் திட்டம்

Share:

கூலாய், ஜூன்.14-

வரவிருக்கும் ஜோகூர் மாநிலத் தேர்தலில் கெராக்கான் கட்சியானது 7 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளில் மட்டுமே கட்சி களமிறங்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்மொழியப்பட்டுள்ள ஏழு தொகுதிகளிலும் தாங்கள் போட்டியிடுவது இன்னும் உறுதிச் செய்யப்படாத நிலையில், அவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மாநிலத் தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த பரிந்துரைகளை கட்சியின் மாநிலத் தலைமையகம் சமர்ப்பித்துள்ளதாக ஜோகூர் மாநில கெராக்கான் தலைவர் தியோ கோக் சீ அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News