Sep 25, 2026
Thisaigal NewsYouTube
ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி
அரசியல்

ஒற்றுமை அரசாங்கம் அமைய பாரிசான் தான் காரணமா? - சாஹிட்டின் கருத்திற்கு அன்வாரின் அரசியல் செயலாளர் பதிலடி

Share:

ஒற்றுமை அரசாங்கம் உருவாக பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியமாக இருந்தது என்று அதன் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி கருத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் அரசியல் செயலாளர் முகமது கமில் அப்துல் முனிம் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பதிவில் கருத்து தெரிவித்துள்ள கமில், ஒற்றுமை அரசாங்கம் பல்வேறு அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பால் உருவானது என்பதையும், அது ஒரு தரப்பின் பங்களிப்பால் மட்டுமே உருவாக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

மேலும், இது தொடர்பாக யாரும் தங்களை மிக உயர்வாகக் காட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும், பழைய பழக்கங்களை கைவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் பாரிசான் நேஷனல் கூட்டணி தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி, பாரிசான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் ஒற்றுமை அரசாங்கம் அமைந்திருக்க முடியாது என்பதை நினைவூட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கமில் அப்துல் முனிம் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

Related News

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் நெருக்கடி குறித்து சட்டத்துறைத் தலைவர் கருத்து தெரிவிக்க உரிமை உண்டு – சட்ட நிபுணர்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

நெகிரி செம்பிலான் அரசாங்கம் துவாங்கு முஹ்ரிஸ் பதவி குறித்த சர்ச்சையை நிறுத்த வேண்டும் – பக்காத்தான் ஹராப்பான்

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

பெரிக்காத்தான் நேஷனல் விவகாரத்தில் ஆர்ஓஎஸ்ஸை குற்றம்சாட்ட வேண்டாம் – அஸ்மின் அலி

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

நெகிரி நெருக்கடிக்கு முந்தைய அரசைக் குறை கூற வேண்டாம் – இஸ்மாயிலுக்கு அமினுடின் சவால்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

மலாக்கா தேர்தல்: அக்டோபர் 7-ல் கூடுகிறது தேர்தல் ஆணையம்

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து

நெகிரி செம்பிலான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் – பிரதமருக்கு உண்டாங்களின் நேரடி நினைவுறுத்து