Jul 15, 2026
Thisaigal NewsYouTube
வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்
அரசியல்

வாவாசான் கட்சித் தலைவராக ஹம்ஸா ஸைனுடின் நியமனம்

Share:

கோலாலம்பூர், ஜூன்.21-

முன்னாள் பெர்சத்து துணைத் தலைவரான டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின், வாவாசான் நெகாரா கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மூத்த அரசியல் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களை ஒருங்கிணைக்கும் புதிய மத்திய தலைமைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற கட்சியின் அவசரப் பொதுக் கூட்டத்தில், மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டான் ஶ்ரீ ரயிஸ் யாத்திம் தலைமைத் தலைவராகவும், முன்னாள் ஜோகூர் பெர்சத்துவின் இணைப்பிரிவுத் தலைவரான Tan Lek Khang, துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், முன்னாள் Melaka முதலமைச்சர் Rahim Thamby Chik, Tasek Gelugor நாடாளுமன்ற உறுப்பினர் Wan Saiful Wan Jan, மற்றும் முன்னாள் Parti Cinta Malaysia தலைவர் Huan Cheng Guan ஆகியோர் கட்சியின் உதவித் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, Indera Mahkota நாடாளுமன்ற உறுப்பினர் Saifuddin Abdullah, கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேவேளையில், Machang நாடாளுமன்ற உறுப்பினர் Wan Ahmad Fayhsal Wan Ahmad Kamal, தகவல் பிரிவுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள், Parti Wawasan Negara கட்சியின் புதிய மத்திய தலைமைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளன.

Related News

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர்  ரவுஃப் விளக்கம்

மலாக்கா அரசில் அதிகாரப் பகிர்வு இல்லை; புத்ராஜெயா மாதிரி மட்டுமே: முதலமைச்சர் ரவுஃப் விளக்கம்

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து  வெளியேறுகிறது ஜசெக.

அதிரடி திருப்பம்: மலாக்கா மாநில ஆட்சியிலிருந்து வெளியேறுகிறது ஜசெக.

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

தாய்லாந்து அமைதிப் பேச்சுவார்த்தை: மலேசியாவின் ஒத்துழைப்பை உறுதி செய்த அமைச்சர்

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி

பெர்சத்து தகவல் பிரிவுத் தலைவர் மீது 10 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கு: வான் சைஃபுல் அதிரடி