Dec 16, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க  ரஃபிஸி ரம்லி மறுப்பா?
அரசியல்

பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் தொடக்கி வைக்க ரஃபிஸி ரம்லி மறுப்பா?

Share:

கோலாலம்பூர், மே.17-

பிகேஆர் கட்சியின் இளைஞர் மற்றும் மகளிர் பிரிவு மாநாடுகள் வரும் மே 22 ஆம் தேதி ஜோகூர் பாருவில் ஏகக் காலத்தில் தொடங்குகிறது. பிகேஆர் கட்சியின் மரபுப்படி, இளைஞர் மற்றும் மகளிர் தேசிய மாநாடுகளைக் கட்சியின் துணைத் தலைவர் தொடக்கி வைப்பது வழக்கமாகும்.

ஆனால், கட்சியின் தேசியத் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி, மாநாட்டைத் தொடக்கி வைக்க மறுத்து விட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

பிகேஆர் கட்சியின் அந்த இரு பிரிவுகளின் மாநாடுகளையும் தம்மால் திறந்து வைக்க இயலாது என்று ரஃபிஸி ரம்லி, ஒரு கடிதத்தின் வாயிலாக கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் தெரிவித்து விட்டதாகக் கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related News