Apr 19, 2026
Thisaigal NewsYouTube
மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை
அரசியல்

மருத்துவமனை முன் ஆர்ப்பாட்டத்தை ரத்து செய்க: வீரப்பன் சுப்பிரமணியம் கடும் எச்சரிக்கை

Share:

புக்கிட் மெர்தாஜாம் மருத்துவமனைக்கு முன்பாக வரும் சனிக்கிழமை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள சட்டவிரோதப் போராட்டத்தை உடனடியாக ரத்து செய்யுமாறு நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

அங்கீகரிக்கப்படாத வழிபாட்டுத் தல நில விவகாரங்கள் தொடர்பாக இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை என்பது இனம், மதம் கடந்து அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் ஒரு முக்கியமான பொதுச் சேவை இடமாகும். அங்கு ஆர்ப்பாட்டம் செய்வது மருத்துவச் சேவைகளையும், ஆம்புலன்ஸ் போக்குவரத்தையும் பாதிப்பதோடு, பொதுமக்களிடையே பதற்றத்தையும் சமூக நல்லிணக்கச் சீர்குலைவையும் ஏற்படுத்தும் என வீரப்பன் எச்சரித்துள்ளார்.

வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான எந்தவொரு தொழில்நுட்பச் சிக்கல்களையும் முறையான சட்ட வழிமுறைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமாகவே தீர்க்க வேண்டும் என வீரப்பன் சுப்பிரமணியம் சுட்டிக்காட்டினார். இத்தகைய ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்குப் பொதுமக்கள் செவிசாய்க்க வேண்டாம் என்றும், பொது அமைதி மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்பவர்கள் மீது போலீஸ் துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Related News