Mar 5, 2026
Thisaigal NewsYouTube
பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை
அரசியல்

பார்ட்டி கெலுவார்கா மலேசியா இன்னும் ROS (ஆர்ஓஎஸ்) இல் பதிவு செய்யப்படவில்லை

Share:

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், பார்ட்டி கெலுவார்கா மலேசியா என்ற புதிய கட்சியைக் கைப்பற்றுவதற்கான விவாதங்கள் நடைபெற்று வருவதாக அறிவித்துள்ள நிலையில், அது இன்னும் ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்படவில்லை என தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் வான் சைஃபுல் வான் ஜான் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு, அக்கட்சியின் ஆரம்ப கட்ட விண்ணப்பத்தை சங்கங்களின் பதிவு அலுவலகமான ROS (ஆர்ஓஎஸ்) நிராகரித்துவிட்டதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அதேவேளையில், தற்போது புதிதாகப் பதிவு செய்யும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் வான் சைஃபுல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அக்கட்சியில் தாங்கள் இணைவதில் எந்த ஒரு தடையும் இல்லை என்றும், எதேனும் தடைகள் வந்தாலும் அவை சரி செய்யப்படும் என்றும் வான் சைஃபுல் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பார்ட்டி கெலுவார்கா மலேசியாa அரசியல் கட்சியாகப் பதிவு செய்யும் எந்த ஒரு புதிய விண்ணப்பத்தையும் தாம் இதுவரை பெறவில்லை என ROS தலைமை இயக்குநர் ஜுல்பிகார் அகமது குறிப்பிட்டுள்ளார்.

Related News

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

பெர்சாத்து கட்சியில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு அஸ்மின் அலி தான் காரணமா? / முகைதீன் யாசின் மறுப்பு

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

SPRM பெருநிறுவன மோசடிக் குற்றச்சாட்டு: அரச விசாரணை ஆணையம் அமைக்க ஜசெக வலியுறுத்து

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

பணம் பறிபோனால் உடனடியாக 997-க்கு அழையுங்கள்: அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் அறிவுறுத்தல்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

மூன்றே வாரங்களில் 100 கோடி ரிங்கிட் விநியோகம்: 1.25 கோடி மலேசியர்கள் 'சாரா' நிதியுதவியால் பயன் - பிரதமர் அன்வார்

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு

சட்டவிரோத ஆலயத்தை இடிக்கக் கோரவில்லை: ஜம்ரி வினோத் மறுப்பு