மலாக்கா மாநிலத் தேர்தலில் மொத்தமுள்ள 28 சட்டமன்றத் தொகுதிகளில், அதிகபட்சமாக 21 தொகுதிகளில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி போட்டியிடலாம் என்று அதன் மலாக்கா மாநிலத் தலைவர் அட்லி ஸாஹாரி தெரிவித்துள்ளார்.
கட்சியின் தேர்தல் இயந்திரத்தின் பலம், வேட்பாளர்களின் திறன், வாக்காளர்களின் ஆதரவு ஆகிய மூன்று அம்சங்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான இறுதி முடிவு நாளை நடைபெறும் பக்காத்தான் ஹராப்பான் தலைவர் மன்றக் கூட்டத்தில் உறுதி செய்யப்பட்டு, சனிக்கிழமை அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்.
அனைத்து 28 தொகுதிகளிலும் போட்டியிடுவதைவிட, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் கவனம் செலுத்துவது சிறந்த உத்தி என்றும் அட்லி தெரிவித்தார். மலாக்கா மாநிலத் தேர்தல் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் அக்டோபர் 31ஆம் தேதி நடைபெறுகிறது.








