Apr 19, 2026
Thisaigal NewsYouTube
சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி
அரசியல்

சுரைடாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் லிம் குவான் எங் வெற்றி

Share:

முன்னாள் அமைச்சர் சுரைடா கமாருதீனுக்கு எதிராக முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங், தொடுத்த அவதூறு வழக்கில் வெற்றி பெற்றுள்ளார்.

கோலசிலாங்கூர், பெஸ்தாரி ஜெயாவில் உள்ள முன்னாள் தோட்டத் தொழிலாளர்களுக்கான சொந்த வீடமைப்புத் திட்டத்தை நிதி அமைச்சர் ன்ற முறையில் லிம் குவான் எங் இரண்டு முறை நிராகரித்ததாக சுரைடா கூறிய குற்றச்சாட்டு பொய்யானது என ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நீதிமன்றம் லிம் குவான் எங்கிற்கு 50,000 ரிங்கிட் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டதுடன், பிரதிவாதிகள் அனைவரும் இணைந்து 5,000 ரிங்கிட் வழக்குச் செலவை வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டது. மேலும், அந்த அவதூறு செய்தியை மீண்டும் வெளியிடத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

2024-ம் ஆண்டு அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசு தொழிலாளர்களுக்காக 200 வீடுகளைக் கட்டப்போவதாக அறிவித்த பிறகு, பழைய திட்டத்தை லிம் குவான் எங் தடுத்ததாக முன்னாள் வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சரான சுரைடா குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News