Aug 27, 2026
Thisaigal NewsYouTube
பிரதமரின் கூற்று வேடிக்கையாக உள்ளது
அரசியல்

பிரதமரின் கூற்று வேடிக்கையாக உள்ளது

Share:

பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இராணுவத்த்தின் அடக்குமுறையை கண்டித்து குரல் எழுப்பியதற்காக தமக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியிருப்பது விசித்திரமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என்று பாஸ் கட்சி பொதுச் செயலாளர் தக்கியிடின் ஹாஸ்ஸான் தெரிவித்துள்ளார்.

உண்மையிலேயே பிரதமர் அன்வாருக்கு அப்படியொரு மிரட்டல் அல்லது அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருக்குமானால் அவர் அந்தந்த நாடுகளின் தூதரர்களை அழைத்து , அரசு தந்திர உறவின் அடிப்படையில் எதிர்ப்பு குறிப்பு ஒன்றை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்று தக்கியுடின் ஹசான் குறிப்ப்பிட்டார்.

அன்வாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுவது அவரின் மகத்துவம் மற்றும் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்கில் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்.

அன்வார் தலைமையிலான அரசு, மக்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெறுவதில் தள்ளாடிக்கொண்டு இருக்கும் வேளையில் அவருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக வந்துள்ள செய்தி விசித்திராக உள்ளது என்று தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டார்.

Related News