Jan 18, 2026
Thisaigal NewsYouTube
Lim Guan Eng மீது பணமோசடி வழக்கு
அரசியல்

Lim Guan Eng மீது பணமோசடி வழக்கு

Share:

Yayasan Albukhary அறநிறுவனத்திற்கான வரிவிலக்கு சலுகைக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ததாக முன்னாள் நிதி அமைச்சர், Lim Guan Eng மற்றும் அவரின் அதிகாரிகளுக்கு எதிராக கூறப்படும் அவதூறு குற்றஞ்சாட்டு தொடர்பில் நிதி அமைச்சு, போலிசில் புகார் செய்யவிருக்கிறது.
இது அடிபடையற்ற குற்றஞ்சாட்டாகும். இதனை நிதியமைச்சு கடுமையாக கருதுவதாக தெரிவித்துள்ளது.

பிரதமரும் நிதியமைச்சருமான Dato Sri Anwar Ibrahim அறிவித்ததைப் போல வருவான வரி சட்டம் 44 துணைச்சட்டம் பிரிவு (6)இன் கீழ் Albukhary அறநிறுவனம் என்பது சமூக நற்காரியங்களுக்கான ஓர் அமைப்பே தவிர கொள்ளை லாபம் ஈட்டும் நிறுவனம் அல்ல என்பதை நிதியமைச்சு மீண்டும் தெளிவுபடுத்தியது. முன்னாள் அமைச்சர் Guan Eng மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக கூறப்படும் அவதூறு தொடர்பில் போலிஸ் புகார் செய்யப்படும் என்று நிதியமைச்சர் கூறினார்.

Related News