Mar 4, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்
அரசியல்

பினாங்கு மாநில ஆட்சிக்குழுவில் மாற்றம்: ஃபஹ்மி சைனோலுக்குப் பதில் கோ சூன் ஐக் நியமனம்

Share:

பினாங்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினராக இருந்த ஃபஹ்மி ஜைனோல் நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பிகேஆர் கட்சியின் புக்கிட் தம்புன் சட்டமன்ற உறுப்பினர் கோ சூன் ஐக் புதிய ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது மனைவியை அடித்து சித்திரவதை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, ஃபஹ்மி சைனோலை மாநில ஆட்சிக்குழு நிர்வாகத்திலிருந்து நீக்க வேண்டும் என்ற பிகேஆர் தலைமைத்துவத்தின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் கோ சூன் ஐக் ந்த மாற்றத்தைச் செய்துள்ளார்.

இதற்கு முன்பு விவசாய தொழில்நுட்பம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பு வகித்த ஃபஹ்மி சைனோல், இன்று முதல் உடனடியாக அப்பதவியிலிருந்து விடுவிக்கப்படுவதாக முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது.

புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள கோ சூன் ஐக்கிற்கான துறைகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. மாநில ஆளுநர் துன் ரம்லி ங்கா தாலிப் இந்த நியமனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், கோ சூன் ஐக் வரும் வெள்ளிக்கிழமை காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்று பதவியேற்க உள்ளார்.

Related News