Apr 19, 2026
Thisaigal NewsYouTube
 பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா  ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்
அரசியல்

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தும் சட்ட மசோதா ஜூன் மாதம் தாக்கல்: ஃபஹ்மி ஃபாட்சில்

Share:

பிரதமரின் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்காத வகையில் வரையறுக்கும் சட்ட மசோதா , வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று அரசாங்கப் பேச்சாளர் டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகத் தொடர்புத் துறை அமைச்சரான ஃபஹ்மி குறிப்பிட்டார்.

"மிகவும் முக்கியமான இந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்ட மசோதாவை நிறைவேற்ற, அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு முழு ஆதரவை வழங்குவார்கள் என தாங்கள் நம்புவதாக அமைச்சரவைக்கூட்டத்திற்கு பின்னர் நடைபெற்ற வாராந்திரச் செய்தியாளர் சந்திப்பில் ஃபஹ்மி இதனை தெரிவித்தார்.

Related News