Apr 19, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு
அரசியல்

சிலாங்கூர் மாநில அரசு செயலகப் பணியாளர்களுக்கு ரமலான் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கீடு

Share:

சிலாங்கூர் மாநில அரசு செயலக கட்டடமான SUK- வில் வேலை செய்யும் துப்புரவுப் பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு நோன்புப் பெருநாளை முன்னிட்டு 'ஷாப்பிங் வவுச்சர்கள்' இன்று வழங்கப்பட்டன.

சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னிலையில், மாநில மனிதவள மற்றும் வறுமை ஒழிப்புத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு இப்பற்றுச்சீட்டுகளை வழங்கினார்.

இது குறித்துப் பேசிய பாப்பாராய்டு, "பண்டிகைக் காலங்களில் குறைந்த வருமானம் பெறும் பணியாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் நோன்புப் பெருநாள் போன்ற காலங்களில் இத்தகைய உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன," என்று குறிப்பிட்டார்.

SUK. கட்டட வளாகத்தில் நடைபெற்ற இன்றைய நிகழ்வில், இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த 63 பணியாளர்கள் தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள ஹரிராயா ஷோப்பிங் வவுச்சரைப் பெற்றுக்கொண்டதாக பாபா ராய்டு தெரிவித்தார்.

"இந்த நிதி உதவிப் பங்களிப்பு, பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாடப் பெரிதும் துணையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News