கோலாலம்பூர், ஆகஸ்ட்.18-
வரும் டிசம்பர் மாதம் தமது செனட்டர் பதவி முடிவடைந்த பின்னர் அமைச்சர் பதவி இல்லாவிட்டாலும் தொடர்ந்து தமது அரசியல் நீடிக்கும் என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு ஸாஃப்ருல் அஸிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பதவிக்கு அப்பாற்பட்ட நிலையிலும் எந்தப் பதவியில் இருந்தாலும் நாட்டிற்குச் சேவையாற்றத் தாம் கடமைப்பட்டுள்ளதாக தெங்கு ஸாஃப்ருல் குறிப்பிட்டார்.
தற்போது உறுதியானத் திட்டங்கள் எதனையும் தாம் கொண்டிருக்கவில்லை என்ற போதிலும் செனட்டர் மூலம் அமைச்சர் பதவி வகிக்கும் வரையில் தாம் கொண்ட பணியில் அதீத கவனம் செலுத்தி வருவதாக தெங்கு ஸாஃப்ருல் தெரிவித்தார்.