கோலாலம்பூர், செப்டம்பர்.02-
முன்னாள் பிரதமரும், பெரிக்காத்தான் நேஷனல் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன் யாசின் உடல் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ அஸ்மின் அலி தெரிவித்துள்ளார்.
பெர்சத்து கட்சியின் தலைவருமான டான் ஶ்ரீ முகைதீன், இவ்வாரத்தில் கட்சியின் எட்டாவது ஆண்டுக் கூட்டத்தைத் தலைமையேற்று வழி நடத்துவார் என்று அவர் குறிப்பிட்டார்.