Oct 11, 2026
Thisaigal NewsYouTube

பிகேஆர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை

திசைகள் செய்திப்பிரிவு
Share:
பிகேஆர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை

பெட்டாலிங் ஜெயா, மே.18-

பிகேஆர் கட்சியின் இளைஞர், மகளிர் பிரிவுகளின் மாநாட்டை மே 22ஆம் தேதி ஜோகூர் பாருவில் துணைத் தலைவர் ரஃபிஸி ரம்லி திறந்து வைக்க மறுத்ததாகக் கூறப்படும் அறிக்கையை அக்கட்சி இன்னும் உறுதிப்படுத்தவில்லை. இது குறித்து கேட்ட போது கட்சியின் பொதுச் செயலாளர் புஃஸியா சால்லே சுருக்கமாக இவ்வாறு பதிலளித்தார்.

பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நூருல் இஸா அன்வாருக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் ரஃபிஸி இந்த மாநாட்டைத் திறந்து வைக்க மறுப்பதாக மலேசியா காஸெட் செய்தி வெளியிட்டது. கோத்தா கினபாலுவில் நடைபெற்ற சபா மாநிலத் தேர்தல் இயந்திரத்தின் தொடக்க விழாவிற்கு பிகேஆர் சபா ரஃபிஸியை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

பிகேஆர் இளைஞர், மகளிர் மாநாட்டைத் திறந்து வைப்பதற்கான அழைப்பை ஏற்க முடியாது என்று ரஃபிஸி பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிமுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பியதாக அந்த அறிக்கை கூறுகிறது.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in அரசியல் →