Oct 19, 2025
Thisaigal NewsYouTube
பிகேஆர் கட்சியில் என்னுடைய போராட்டம் வாழ்வா சாவா:  ஒப்புக் கொண்டார் ரஃபிஸி ரம்லி
அரசியல்

பிகேஆர் கட்சியில் என்னுடைய போராட்டம் வாழ்வா சாவா: ஒப்புக் கொண்டார் ரஃபிஸி ரம்லி

Share:

கோலாலம்பூர், மே.19-

நடைபெறவிருக்கும் பிகேஆர் உயர் மட்டப் பதவிகளுக்கான தேர்தலில் கட்சியின் தேசிய துணைத் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்வதற்கு அக்கட்சியினின் தேசியத் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸாவிடம் கடும் போட்டியை எதிர்நோக்கியுள்ள ரஃபிஸி ரம்லி, கட்சிக்குள் தாம் நடத்தி வரும் தாக்குதலானது, தம்முடைய அரசியல் எதிர்காலத்திற்கான வாழ்வா? சாவா ? போராட்டமாகும் என்று அறிவித்துள்ளார்.

பிகேஆர் கட்சியைத் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கொண்டு வருவதிலும், மக்களின் கவன ஈர்ப்புக்குரிய ஒரு கட்சியாகவும், கொள்கை ரீதியாகச் சாமானிய மக்களைக் காக்கும் கட்சியாகவும் கொண்டு வருவதில் தம்முடைய அளப்பரிய பங்களிப்பு, மக்களை விட காலத்திற்குத் தெரியும்.

பிகேஆர் கட்சியில் உண்மை நிலையை எடுத்துச் சொல்வதில், அது தாக்குதல் நடத்துவதைப் போல் இருக்கலாம். ஆனால், தாக்குதல் நடத்த வேண்டிய நிலையில் உள்ள ஒருவர், தாக்குதலின் மூலமே வாழ்வா, சாவா, என்ற போராட்டத்தில் நிற்கும் ஒருவ , தாக்குதலை நடத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது என்று பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான ரஃபிஸி ரம்லி தெரிவித்தார்.

தாம் நடத்தும் பகிரங்கத் தாக்குதலில் மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் சிறைச்சாலைக்குள் தள்ளப்பட்டு விடலாம் என்றும் அடுத்த கட்சியில் உள்ளவர்கள் என்னைத் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.

இது சிறைச்சாலைக்குள் செல்லும் விவகாரம் அல்ல. பிகேஆர் கட்சியில் நடக்கும் நடப்பு உண்மையை எடுத்துச் சொல்வதற்கு, என்னுடைய கருத்துகளைக் கட்சியின் பேராளர்கள் மற்றும் மக்கள் மன்றத்தில் முன் வைக்கிறேன்.

சண்டை என்றால் சண்டைதான். எதிர்த்துப் போராட வேண்டும் என்றால், போராடித்தான் ஆக வேண்டும். இங்கு பயம் என்பதற்குக் கிஞ்சிற்றும் இடமில்லை என்று நேற்றிரவு பேரா மாநில பேராளர்களுக்குத் தமது சமூக வலைத்தளம் மூலம் ஆற்றிய உரையில் ரஃபிஸி ரம்லி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related News

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

எந்தவோர் அரசியல் கட்சியுடனும் கூட்டு சேர அம்னோ தயார்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

சபா தேர்தலைக் கண்காணிக்க 40 எஸ்பிஆர்எம் அதிகாரிகள்

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

பாரிசான் நேஷனலை விட்டு வெளியேறுவது மஇகாவைப் பொறுத்தது

சபா தேர்தல்:  வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

சபா தேர்தல்: வேட்புமனுத் தாக்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும் - ஸாஹிட் ஹமிடி

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

பெரிக்காத்தான் நேஷனல் தற்போது விசித்திரமான கூட்டணியாக மாறிக் கொண்டு இருக்கிறது: ஜசெக இளைஞர் பிரிவு வர்ணனை

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!

நடத்தை விதிகளை மீறியதற்காக வான் சைஃபுல் உட்பட 5 பேர் பதவி நீக்கம் - வான் அஹ்மாட் ஃபைசாலை இடைநீக்கம் செய்தது பெர்சாத்து!