ஷா ஆலாம், ஆகஸ்ட்.25-
பாரிசான் நேஷனலில் ஓர் அங்கமாக விளங்கும் மசீச.வுடன் இணைந்து பணியாற்ற ஜசெக.விற்கு ஆர்வமில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அதே வேளையில் சீனர்களைத் தளமாகக் கொண்ட மசீச.வுடன் இணைந்து பணியாற்றுவதற்கு ஜசெக ஆர்வம் கொண்டுள்ளதாக எந்த சமயத்திலும் அறிவித்தது கிடையாது என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மடானி அரசாங்கத்தில் ஒரு பகுதியாக மசீச. இருந்த போதும், அந்தக் கட்சியுடன் எந்த வகையிலும் ஒத்துழைப்புக் கொள்ள ஜசெக. விரும்பியது கிடையாது என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.
பாரிசான் நேஷனலுடன் ஒத்துழைப்பு கொள்ள ஜசெக.வினால் முடியும். ஆனால், அதில் இருக்கக்கூடிய உறுப்புக் கட்சிகளின் ஒத்துழைப்பு தொடர்பான உள்விவகாரங்களை அந்தக் கூட்டணிதான் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் விளக்கினார்.