ஜார்ஜ்டவுன், ஆகஸ்ட்.15-
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ டாக்டர் முகமட் அக்மால் சாலேவுடனான உறவைத் துண்டித்துக் கொள்ளும்படி ஜசெக. தலைமைத்துவத்தையும், அதன் இளைஞர் பிரிவையும் பினாங்கு மாநில ஜசெக இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.
அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோ இளைஞர் பிரிவுடன் ஜசெக ஒத்துழைப்புக் கொள்ளக்கூடாது என்று டாப்சி DAPSY எனப்படும் ஜசெக இளைஞர் பிரிவின் பினாங்கு மாநிலம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசிய நல்லிணக்கத்தையும், சட்டங்களின் இறையாண்மைக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் அக்மால், அரசியல் வரம்பை மீறி வருகிறார் என்று பினாங்கு இளைஞர் பிரிவு குற்றஞ்சாட்டியது.