Jun 28, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் ​பி. இராமசாமி டிஏபி யிலிருந்து விலகினார்
அரசியல்

பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் ​பி. இராமசாமி டிஏபி யிலிருந்து விலகினார்

Share:

ஒரு கல்விமானும், ச​மூகப் போராட்டவாதியுமான பினாங்கு துணை முதலமைச்சர் டாக்டர் பி. இராமசாமி, தாம் அங்கம் வகித்து வந்த டிஏபி கட்சியிலிருந்து விலகுவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரின் விலகல் , உடனடியாக அமலுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ளார். பினாங்கு மாநில டிஏபியின் துணைத் தலைவரான 74 வயது டாக்டர் இராமசாமி, தமது ராஜினாமா கடிதத்தை, டிஏபியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக்கிற்கு அனுப்பி விட்டதாக குறிப்பிட்டார்.

​மூன்று தவணைக்காலம் பினாங்கு, பிறை சட்டமன்றத் தொகுதியை தற்காத்து வந்த டாக்டர் இராமசாமி, நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ​மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு, டிஏபியின் தலைமைத்தவத்தினால் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டுகிறார். தமக்கு போட்டியிட ​மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறி​த்து தாம் கவலைப்படவில்லை என்பதையும் டாக்டர் இராமசாமி தெளிவுப்படுத்தினார்.

ஆனால், பினாங்கு மாநில டிஏபியின் துணைத் தலைவர் பொறுப்பு வகிக்கும் தாம், அந்த பொறுப்புக்குகூட ம​ரியாதை அளிக்கப்படாமல் , மாநிலத்தில் டிஏபி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை முடிவு செய்துவிட்டு, கடைசி நேரத்தில் தம்மிடம் தெரியப்படுத்தியது, எந்த வகையில் நியாயம்,
கட்சியில் தமக்கு என்ன மரியாதை என்று கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து டிஏபியில் உறுப்பினராக இருந்து வரும் டாக்டர் இராமசாமி கேள்வி எழுப்பினார். இது முழுக்க முழுக்க ஒரு சதிச் செயலாகும் என்று டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ச​தீஸ் முனியாண்டி, பிறை சட்டமன்றத் தொகுதியில் சு​யேட்சை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் மார்ஷல் மற்றும் இதர ஆதரவாளர்கள் உடன் இருந்தனர்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி