Jul 18, 2026
Thisaigal NewsYouTube
லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு
அரசியல்

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

Share:

ஜோகூர் பாரு, ஜூன்.28-

ஜோகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, N27 லாயாங்-லாயாங் தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் குணா பாலகிருஷ்ணன், தனது இரண்டாம் நாள் தேர்தல் பிரச்சாரத்தை வீடு வீடாகச் சென்று மிகவும் தீவிரமாக முன்னெடுத்துள்ளார். மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ள அவர், வாக்காளர்களை நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.

பிரச்சாரத்தின் இடையே நமது திசைகளுக்குப் பேட்டியளித்த குணா பாலகிருஷ்ணன், தொகுதி மக்களிடம் இருந்து தங்களுக்குக் கிடைத்து வரும் வரவேற்பு மிகவும் ஊக்கமளிப்பதாகத் தெரிவித்தார். இதுவரை தாங்கள் சென்ற அனைத்து வீடுகளிலும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் தங்களின் ஏகோபித்த மற்றும் முழுமையான ஆதரவை வெளிப்படுத்தி வருவதாக அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

தொகுதியில் தீர்க்கப்படாமல் உள்ள மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகள் மற்றும் குறைகள் அனைத்திற்கும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி நிச்சயம் முறையான தீர்வுகளை வழங்கும் என்பதைத் தாங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிய வைத்துள்ளதாக அவர் கூறினார். மேலும், இத்தேர்தலில் லாயாங்-லாயாங் பகுதிக்குத் தேவையான மிகச் சிறந்த நல்ஆட்சியைத் தேர்ந்தெடுக்கும் முழு அதிகாரமும் பொதுமக்களிடமே உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

Related News

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

நெகிரி மாநிலத் தேர்தல் முடிவு 16-ஆவது பொதுத்தேர்தல் கூட்டணியைத் தீர்மானிக்கும்: ஜாஹிட் அறிவிப்பு

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

வெற்றிக்காக மக்களின் நம்பிக்கையை பி.கே.ஆர், பக்காத்தான் ஹரப்பான் ஒருபோதும் அடகு வைக்காது: புசியா சலே கூறுகிறார்

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

மணிவண்ணனை வெற்றி பெற செய்ய வேண்டும்: துணை அமைச்சர் யுனேஸ்வரன் கோரிக்கை

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

லிங்கி சட்டமன்றத் தொகுதியில் புதிய துறைமுகம் மற்றும் தொழில் பேட்டை உருவாக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

அமினுடின் ஹருனின் சாதனை நிர்வாகத்தை முன்வைத்தே பிரச்சாரம்: ஜெம்பூலில் டத்தோஸ்ரீ ஃபாஹ்மி ஃபட்சில் அறிவிப்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

ஜோகூர் மாநிலத்தின் புதிய செயற்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு