Jun 27, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்
அரசியல்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

Share:

ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள வேளையில், ஆளும் பாரிசான் நேஷனல் கூட்டணிக்கு அதிரடி சவால் விடுத்து அனைத்து 56 தொகுதிகளிலும் தனது வேட்பாளர்களைக் களம் இறக்கியுள்ளது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி.

ஜோகூர் மாநிலத்தின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்துள்ள இந்த தேர்தல் போரில், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் அங்கத்துவ கட்சிகளான பிகேஆர் 20 தொகுதிகளிலும், அமானா 19 தொகுதிகளிலும், ஜனநாயக செயல் கட்சியான ஜசெக 17 தொகுதிகளிலும் மும்முரமாகப் போட்டியிடுகின்றன.

இந்த அனல் பறக்கும் தேர்தல் களத்தில், ஸ்டாய் தொகுதியின் மண்ணின் மைந்தரான வழக்கறிஞர் கார்த்தியாயினி ஜெயபாலன் ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகப் போட்டியிட்டு உள்ளூர் மக்களின் பலத்த ஆதரவோடு களம் காண்கிறார். அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் புத்திரி வங்சா தொகுதியில் முன்னாள் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லி மாலிக் போட்டியிடுவது இந்தத் தேர்தலின் ஆகப் பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.

இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்ற வேட்புமனுத்தாக்கல் நிகழ்வில், ஜசெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தேசியத் தலைவர் கோபிந்த் சிங் டியோ நேரடியாகத் தலைமையேற்றார்.

அதேபோன்று, செமேரா சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராகக் களம் காணும் முகமது குசான் அபு பக்கார் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தபோது, தொடர்புத்துறை அமைச்சரும் கூட்டணியின் தகவல் தொடர்பு இயக்குநருமான டத்தோ பாஹ்மி பாட்ஸில் பெரும் ஆதரவாளர்கள் குழுவிற்குத் தலைமையேற்றுச் சென்று அவருக்குத் தனது பலத்த ஆதரவை வெளிப்படுத்தினார்.

வேட்புமனுத்தாக்கல் மிக சுமூகமாகவும் கட்டுக்கோப்பாகவும் நடைபெற்றது என்று தேர்தல் ஆணையமான SPR அறிவித்துள்ளது.


Related News