டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலில் இணையுமாறு தங்களை வற்புறுத்த வேண்டாம் என்று பெர்சத்து கட்சியை சேர்ந்தவர்களை அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கேட்டுக்கொண்டார்.
இந்த போன்று தொடர்ச்சியாக அழைப்பும், கோரிக்கையும் விடுத்து வருவது வீண்விரய செயலாகும். காரணம், இதன் மூலம் நேரம்தான் விரயமாகும் என்று அகமட் ஜாஹிட் குறிப்பிட்டார்.
அம்னோவைப் பொறுத்தவரையில் இந்த நாட்டில் உள்ள அனைத்து மலேசியர்களின் நலனையும் கட்டிக்காப்பதற்கான கடப்பாட்டை கொண்டிருக்கிறது என்று அகமட் ஜாஹிட் தெளிவுபடுத்தினார்.
பெரிக்காத்தான் நேஷனல் தலைமையில் மத்திய அரசாங்கத்தை அமைப்பதற்கு தங்களுடன் இணையுமாறு பெர்சத்து கட்சியின் முன்னாள் தகவல் பிரிவுத் தலைவர் ரசாலி இட்ரிஸ் விடுத்துள்ள கோரிக்கை தொடர்பில் அகமட் ஜாஹிட் எதிர்வினையாற்றினார்.








