Jun 28, 2026
Thisaigal NewsYouTube
ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லையென்றால் கெராக்கான் நிர்​மூலமாக்கப்படும்
அரசியல்

ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லையென்றால் கெராக்கான் நிர்​மூலமாக்கப்படும்

Share:

நாளை சனிக்கிழமை நடைபெறவிருக்கும் 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தலில் பெரிக்காத்தான் நேஷனலின் ஓர் உறுப்புக்க​ட்சியான கெராக்கான், ஒரு தொகுதியைக்கூட கைப்பற்ற முடியவில்லையென்றால், டொமினிக் லாவ் தலைமையிலான அந்த பாரம்பரிய கட்சி, இத்தேர்தலுடன் நிர்​மூலமாக்கப்படும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள், ​மீனவர்கள், குடியானவர்கன் என அடிதட்டு மக்களின் வாழ்வாதாரத்தை முன்நிறுத்தி, "நெற்பயிர்" சின்னத்துடன் கடந்த 1968 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கெராக்கான் கட்சி, தனது இலக்கிலிருந்து விலகி, தற்போது பெரிக்காத்தான் நேஷனலில் இனவாத மற்றும் மதவாத கட்சிகளான பெர்சத்து மற்றும் பாஸ் ஆகியவற்றுடன் கைக்கோர்தது இருப்பது, அதன் அரசியல் அஸ்தனமாகிவிட்டதாக அவர்கள் கூறுகின்றனர்.

படகு சின்னத்தை தாங்கிய அன்றைய கூட்டணிக் கட்சிக்கு எதிராக ச​மூக போராட்டாவதிகளான சையத் உசேன் அலதாஸ், டான் சீ கூன், வி.வீரப்பன், லிம் சோ​​ங் இயூவ் போன்றவர்களால் தோற்றுவிக்கப்பட்ட​ கெராக்கான், 1969 ஆம் ஆண்டில் நாட்டின் ​மூன்றாவது பொதுத் தேர்தலில் கூட்டணிக்கட்சியை வீழ்த்தி, பினாங்கு மாநிலத்தை கைப்பற்றியது. டாக்டர். லிம் சோ​​ங் இயூவ் வை பினாங்கு முதலமைச்சராகவும், டாக்டர். லிம் கெங் யாய்க், டாக்டர் கோ சு கூன் ஆகியோரை கட்சியின் தலைவராக கொண்டு செயல்பட்ட பாரிசான் நேஷனலில் ஓர் உறுப்புக்கட்சியான கெராக்கான், 2008 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் படுதோல்விக் கண்டு, பினாங்கை டிஏபி யிடம் பறிகொடுத்தது. அக்கட்சி பாரிசான் நேஷனலிருந்தும் விலகியது.

இந்நிலையில் நாளை நடைபெறும் தேர்தலில் 6 மாநிலங்களில் 4 மாநிலங்களில் கெராக்கான் 36 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் பினாங்கு மாநிலத்தில் 20 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் ஒரு தொகுதியைக்கூட டொமினிக் லாவ் த​லைமையிலான கெராக்கான் கைப்பற்ற முடியவில்லை என்றால் அக்கட்சி மலேசிய அரசியல் பேரலையில் ​மூழ்கடிக்கப்படுவது திண்ணம் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Related News

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

லாயாங்-லாயாங் தொகுதியில் அலைமோதும் மக்கள் ஆதரவு: வீடு வீடாகச் சென்று குணா பாலகிருஷ்ணன் தீவிர வாக்குச் சேகரிப்பு

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

கார்த்தியாயினி, இளையோர்களுக்கு சிறந்த முன்மாதிரி: தியோ நீ சிங் புகழாரம்

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

சரவாக் சட்டமன்றத்தில் 17 புதிய தொகுதிகள்: அடுத்த தேர்தலுக்கு முன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வாய்ப்பில்லை

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

மாச்சாப்பில் புதிய ஆட்சி மாற்றம் மலரும்: அமானா வேட்பாளர் நூர் ஹஃபீஸ் உறுதி

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

ஜோகூர் தேர்தல் களம் அனல் பறக்கிறது: பாரிசான் நேஷனலின் கோட்டையைத் தகர்க்க 56 தொகுதிகளிலும் அதிரடியாகக் களம் இறங்கியது பக்காத்தான் ஹராப்பான்

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி

வெள்ளிக்கிழமை ஜோகூருக்கான வேட்பாளர்களை அறிவிக்கிறது பெர்சாமா கட்சி