நீதிமன்றத்தில் இரண்டு குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியிருக்கும் கெடா மாநில மந்திரி பெசார் முகமட் சனூசி முகமட் நூர், நேற்று அமைக்கப்பட்ட பாஸ் கட்சி தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனலின் கெடா மாநில ஆட்சிக்குழுவில் தான் ஒருவரே 8 இலாாக்களை ஆக்கிரமித்துக்கொண்டது, மாநில நிர்வாகத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அந்த எட்டு இலாக்காக்களும் கெடா மாநில ஆட்சியை முன்னெடுப்பதற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த துறைகளாக இருப்பதால் சனூசி ஒருவரே அந்த எட்டு துறைகளையும் கபலிகரம் புரிந்து இருப்பது மாநில நிர்வாகத்தில் பல்வேறு அசெகரியங்களுக்கு வித்திடலாம் என்று ஆய்வார்கள் கூறுகின்றனர்.
10 ஆட்சிக்குழு உறுப்பினர்களை கொண்ட கெடா மாநில ஆட்சிக்குழுவில் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் தலைமையிலான பெர்சத்து கட்சிக்கு வெறும் 3 இடங்களே வழங்கப்பட்டுள்ளதாக கூறி, பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது. ஒருவரே எட்டு இலாக்காளை கைப்பற்றி இருப்பது அக்கூட்டணியில் பிளவையும் , பேதங்களையும் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
கெடா மாநில திட்டமிடல் துறை , நில விவகாரத்துறை, கனிம மற்றும் பூவியியல் துறை, நில விளைச்சல் துறை, நிதித்துறை , மாநில அரசு சார்பு நிறுவனங்கள், மாநில பொருளாதார நடவடிக்கை மன்றம் மற்றும் 2035 ஆம் ஆண்டுக்கான கெடா மாநில மேம்பாட்டுத்துறை ஆகிய எட்டுத்துறைகளை சனூசி கைப்பற்றியுள்ளார்.

Related News

இன அரசியலுக்கு அப்பால் ஒரு மலேசியா! — டான் சீ கூனின் மரபு இளைஞர்களுக்கு பாடம்

வெறும் வாக்குறுதி இல்லை; செயல் திட்டமே முக்கியம்!” – 19 இந்திய NGO-க்களுடன் ‘பெர்சாமா’ முக்கிய ஆலோசனை

ஜசெக-வை ஹாடி விமர்சிக்கலாம்... ஆனால் அவதூறும் தூண்டுதலும் கூடாது!

மலாக்காவில் 15% வாக்கு ஆதரவை இலக்காகக் கொண்ட பெர்சாமா!

சைஃபுடின் இஸ்மாயில் பிகேஆர் இடைக்கால துணைத் தலைவராக முழுப் பொறுப்பேற்கிறார் – அன்வார் அறிவிப்பு


