பேரா மாநிலத்தில் உள்ள சீனப்பள்ளிகள் சிலவற்றுக்கு வழங்கப்பட்டுள்ள அரசாங்க மானிய காசோலை அட்டைகளில் டிஏபி சின்னம் குறிக்கப்பட்டுள்ளது குறித்து ஊராட்சித்துறை மேம்பாட்டு அமைச்சர் ஙா கோர் மிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலெஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.
தற்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் பக்காத்தான் ஹராப்பான் மட்டுமின்றி பாரிசான் நேஷனல் மற்றும் பிற கட்சிகளால் கட்டி எழுப்பப்பட்டுள்ள ஓர் ஒற்றுமை அரசாங்கமாகும். அந்த ஒற்றுமை அரசாங்கத்தை பிரதிநிதித்து பள்ளிகளுக்கு வழங்கக்கூடிய மானியம் தொடர்பான காசோலைகளில் எதற்காக டிஏபி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று டாக்டர் அக்மால் சாலெஹ் வினவினார்.
சம்பந்தப்பட்ட சீனப்பள்ளிகளுக்கு டிஏபி தனது சொந்த மானியத்தை வழங்கியிருக்குமானால் அது குறித்து கேள்வி எழுப்புவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புத்ராஜெயாவினால் வழங்கப்படக்கூடிய மானியம் தொடர்பான காசோலைகளில் எதற்காக டிஏபி தனது சின்னத்தை பயன்படுத்தியது என்பது குறித்து பேரா மாநில டிஏபி தலைவருமான ஙா கோர் மிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

டொனால்ட் டிரம்பிற்கு அமோக வரவேற்பு மிகையானது: முகைதீன் சாடல்

அமெரிக்காவுடன் இணைந்து அரிய கனிமங்கள் மேம்பாட்டுக்கான ஒப்பந்தத்தில் மலேசியா கையெழுத்து!

விநியோகச் சங்கிலி உறுதிப்பாட்டையும் சந்தை விரிவாக்கத்தையும் உட்படுத்தி மலேசியா-அமெரிக்கா கையெழுத்திட்ட மாபெரும் வர்த்தக ஒப்பந்தம்

சபா, திரெங்கானு தேர்தலுக்கு மசீச தயார்: பிஎன் தலைவர் கையில் இறுதி வேட்பாளர் பட்டியல்!

மலேசியாவின் அரச தந்திர வெற்றி: டிரம்ப் வருகையில் தாய்லாந்து-கம்போடியா வரலாற்று அமைதி ஒப்பந்தம் கையெழுத்து!


