கோலாலம்பூர், ஜூலை.19-
பொருளாதார நிச்சயமற்றத் தன்மைக்கு மத்தியில் அரசியல் நிலைத்தன்மையை உறுதிச் செய்ய, பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது பதவிக் காலம் முடியும் வரை பிரதமராக நீடிக்க வேண்டும் என முன்னாள் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி வலியுறுத்தியுள்ளார். தற்போது ஆட்சியை மாற்றுவது, மெதுவான வட்டார வளர்ச்சிக் கணிப்புகள் உட்பட அதிகரித்து வரும் பொருளாதாரச் சவால்களை நிர்வகிக்கும் முயற்சிகளை அச்சுறுத்தும் என்று அந்த பண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அன்வார் பதவி விலகக் கோரி எதிர்வரும் ஜூலை 26 ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஏற்பாடு செய்துள்ள 'துருன் அன்வார்' பேரணியில் 3 இலட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர். முன்னதாக, உயர்மட்ட நீதித்துறை நியமனங்களில் தாமதம் குறித்து ரஃபிஸியும் மேலும் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் விசாரணைக் குழு அமைக்கக் கோரியதால், ஜோகூரில் உள்ள பிகேஆர்-ன் 19 தொகுதிகள் அவர்களை இடைநீக்கம் செய்ய வலியுறுத்தி வந்தன.