Aug 28, 2026
Thisaigal NewsYouTube
மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை
அரசியல்

மலாக்கா அரசில் இருந்து விலகும் முடிவை மறுபரிசீலனை செய்க: ஜசெக-விற்கு பிரதமர் அன்வார் கோரிக்கை

Share:

பாரிசான் நேஷனல் தலைமையிலான மலாக்கா மாநில அரசாங்கத்தில் இருந்து விலகும் முடிவை ஜசெக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பக்காத்தான் ஹரப்பான் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தாமும், ஜசெக பொதுச்செயலாளர் அந்தோணி லோக் மற்றும் மலாக்கா முதலமைச்சர் அப் ரவூப் யூசோ ஆகியோரும் முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மலாக்கா நிர்வாகத்துடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், மக்கள் நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக இக்கூட்டணியைத் தொடர்வது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

மலாக்கா மாநிலச் சட்டமன்றத்தில் 7 நியமன உறுப்பினர்களை அனுமதிக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, மலாக்கா மாநில அரசில் உள்ள தங்களின் பதவிகளைத் துறப்பதாக ஜசெக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், பிரதமரின் இந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related News