Aug 28, 2026
Thisaigal NewsYouTube
நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்
அரசியல்

நெகிரி செம்பிலான் தேர்தல்: பாஸ் - அம்னோ கூட்டணி நிலவரம் புதன், வியாழனில் தெரியவரும்

Share:

நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலுக்கான பாஸ் மற்றும் அம்னோ கட்சிகளுக்கு இடையிலான கூட்டணிக் கட்டமைப்பு, நாளை புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்களை அறிவிக்கும்போது தெளிவாகத் தெரியவரும் என பாஸ் தேர்தல் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்களிடையே முரண்பாடான கருத்துகள் நிலவினாலும், பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நடந்து வருவதாக அவர் குறிப்பிட்டார். வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி நடைபெறவுள்ள இத்தேர்தலில், பாஸ் கட்சியின் இலக்கு பெரிக்காத்தான் நேஷனலுடன் இணைந்து மாநில ஆட்சியைக் கைப்பற்றுவதாகும்.

முன்னதாக, பாஸ் கட்சியுடன் எந்தவொரு முறையான கூட்டணியும் எட்டப்படவில்லை என பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கூறியிருந்த நிலையில், அனுவார் மூசாவின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

Related News